பெண்ணா பிறந்தது ஒரு குத்தமா.? பாலியல் வன்கொடுமை பயத்தில்… 3 வருஷம் மகளை வீட்டிற்குள் அடைத்த வைத்த தாய்… நெஞ்சை உலுக்கிய சம்பவம்…!!

By Soundarya on கார்த்திகை 20, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு முழுமையாக இருக்கிறதா? என்றால் பாதுகாப்பு இருக்கிறது என்று சொல்ல முடியாது. அதற்காக பெண் குழந்தைகளை பள்ளி, கல்லூரிக்கு வெளி இடத்திற்கு  அனுப்பாமல் இருக்க முடியுமா? அனுப்பி தான் ஆக வேண்டும். ஆனால் ஆந்திராவில் ஒரு தாய் தினமும் நாடகம் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை பார்த்து பயந்து போய் தன்னுடைய மகளை வீட்டிற்குள்ளேயே பூட்டி வைத்துள்ளார். கணவர் இல்லாததால் பள்ளியில் நன்றாக படித்துக் கொண்டிருந்த மகள் பருவ வயதை எட்டியதும் வெளி உலகம் தெரியாமல் வீட்டிற்குள்ளே பூட்டி வைத்துள்ளார். ஆந்திரா  மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரத்தில் வசித்து வருபவர் பாக்கியலட்சுமி. இவர் கணவர் இறந்து விட்டதால் மகள் மவுனிஷாவுடன் வசித்து வந்துள்ளார்.

மவுனிகா நன்றாக படிக்கும் மாணவி. பள்ளியில் முதல் மாணவியாக திகழ்ந்தார். இதற்கிடையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அவர் பருவ வயதை எட்டியதால் பள்ளிக்கு அனுப்பாமல் பாக்கியலட்சுமி வீட்டிலேயே வைத்துள்ளார்.. மேலும் வீட்டிற்குள்ளேயே வைத்து வெளியே அனுப்பாமல் மகளை அடைத்து வைத்துள்ளார். மூன்று வருடங்களாக வீட்டிற்குள் அடைத்து வைத்துள்ளார் .ஓய்வூதியம்  மூலமாக காலத்தை ஓட்டி வந்த பாக்கியலட்சுமி வெளியிடங்களுக்கு செல்லும்போது வீட்டின் மின் இணைப்பை துண்டித்துள்ளார்.

   

மகளை உள்ளே வைத்து பூட்டி விட்டு சென்று வந்துள்ளார். இருட்டில் அந்த சிறுமி தவித்து வந்துள்ளார். இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஆத்திரத்தில் அவரை கடுமையாக திட்டி உள்ளார்கள். ஆனால் அவரை இதை எதையுமே கண்டு கொள்ளவில்லை. இதனை எடுத்து இந்த விஷயத்தை அறிந்த அந்த பகுதி அங்கன்வாடி ஊழியர் போலீசுக்கு தகவல் தெரிவி த்துள்ளார் .இதனையடுத்து போலீசாரம் அதிகாரிகளும் அவருடைய வீட்டுக்குள் நுழைந்து சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளார்கள். மேலும் தாயாருக்கு கவுன்சில் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.