விளையாட போறதுக்கு சண்டையா…? 2 குழந்தைகளை கத்திரிக்கோலால் குத்தி கொன்ற தாய்… ரத்த வெள்ளத்தில் அலறிய பெண்… குலை நடுங்க வைக்கும் பயங்கர சம்பவம்…!!

By Devi Ramu on ஐப்பசி 19, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் கெர்லி நகருக்கு அருகிலுள்ள தந்தியா கிராமத்தில், தாய் ஒருவர் தனது இரு குழந்தைகளைக் கத்தரிக்கோலால் குத்திக் கொன்றுவிட்டுத் தாமும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உஷா சர்மா என்பவரது 4 வயது மகள் நந்தினி வெளியே விளையாடச் செல்வது தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உஷா, தனது மகன் முகுல் (5) மற்றும் மகள் நந்தினி ஆகியோரை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு கத்தரிக்கோலால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். பின்னர் தன்னை தானே குத்தி கொண்டார்.

   

அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள் கதவை உடைத்துப் பார்த்தபோது மூவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும் சிகிச்சையின் போதும் குழந்தைகளும் தாயும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அங்கு வந்த உஷாவின் தங்கை மனீஷா அதிர்ச்சியில் தன் தலையைச் சுவரில் மோதி காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.