பாஜக பெண் கவுன்சிலருக்கு நேர்ந்த கொடூரம்…! வழியை மறித்து கையைப் பிடித்து இழுத்த மர்ம கும்பல்… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் விவகாரம்…!!

By Devi Ramu on ஐப்பசி 19, 2026

Spread the love

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், ராஸ் கார்பா நிகழ்ச்சிக்குத் தனது குடும்பத்தினருடன் சென்ற பாஜக பெண் நகராட்சி கவுன்சிலருக்குக் காரை மறித்து அத்துமீறல் மற்றும் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இசன்பூர் பகுதியில் இருந்து கூகுள் மேப் உதவியுடன் கார்பா நிகழ்ச்சிக்குக் கவுன்சிலர், அவரது மகன் மற்றும் உறவினர்கள் காரில் சென்று கொண்டிருந்தனர்.

பாதேவாடி கால்வாய் அருகே வழி விடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஷோயப் ஷா பக்கீர் என்பவர் காரை மறித்து ஆபாசமாகப் பேசியுள்ளான். பொதுமக்கள் கூடியதால் அங்கிருந்து தப்பிச் சென்ற குடும்பத்தினரை, சர்கேஜ் அருகே மீண்டும் அந்த நபர்கள் மறித்துள்ளனர். கவுன்சிலர் காரின் கண்ணாடியைக் கீழே இறக்கியபோது, அவரது கையைப் பிடித்து இழுத்து, காரின் கதவை உடைக்க முயன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். உடனடியாகக் குடும்பத்தினர் 112 என்ற அவசர உதவி எண்ணிற்கு அழைத்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வெஜல்பூர் காவல்துறையினர், தாக்குதலில் ஈடுபட்ட ஷோயப் ஷா பக்கீர் உட்பட 3 பேரையும் பாலியல் தொல்லை மற்றும் தாக்குதல் வழக்குகளின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.