தெலுங்கானா மாநிலத்தில் 9-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மகள் தொடர்ந்து செல்போன் பயன்படுத்தியதால் ஆத்திரமடைந்த பெற்ற தாயே அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, தற்கொலை என நாடகமாடிய கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ரங்காரெட்டி மாவட்டம் கொத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனுமன் கோவில் காலனியைச் சேர்ந்த முய்யாடி ராஜு – விஜயலட்சுமி (34) தம்பதியினரின் 14 வயது மகள் சுவர்ணா, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சிறுமி சுவர்ணா எப்போதும் செல்போனைப் பயன்படுத்திக் கொண்டிருந்ததால் தாய் விஜயலட்சுமிக்கும் மகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த அக்டோபர் 27 அன்று இதுதொடர்பாக மீண்டும் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் உருவாகியுள்ளது.
இதில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற தாய் விஜயலட்சுமி, தனது சொந்த மகளின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர் இச்சம்பவத்தை மறைக்க மகளின் உடலைச் சேலையால் தூக்கில் தொங்கவிட்டுத் தற்கொலை போல நாடகமாடியுள்ளார். எனினும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டே கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தாய் விஜயலட்சுமி குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரைக் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…
உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த சந்தீப் வர்மா என்பவரும் ரீமா வர்மா (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்து…
திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…
பெங்களூருவின் பன்னேருகட்டா பகுதி அருகே சி.கே. பாளையா சாலையில் அமைந்துள்ள 'ஹலேவூரு கபாப் சென்டர்' உணவகத்தில் அக்டோபர் 28 அன்று…
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று…