பஞ்சாப் மாநிலம் பட்டிண்டா அருகே உள்ள ராம்புரா பகுதியில், பெற்ற தாயே தனது இரு குழந்தைகளையும் கள்ளக்காதலுக்காக விஷம் வைத்துக் கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த புத் சிங் – ஜெஸ்ஸி கவுர் தம்பதியினருக்கு சுக்ப்ரீத் (8) என்ற மகளும், ஃபதேவிர் (6) என்ற மகனும் இருந்தனர். தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, புத் சிங் தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்தச் சூழலில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மகள் சுக்ப்ரீத் திடீரென ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார். உடல்நலக் குறைவால் மகள் இறந்ததாகக் கூறி ஜெஸ்ஸி கவுர் உடலை அடக்கம் செய்தார். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே மகன் ஃபதேவிரும் அதே போன்று ரத்த வாந்தி எடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தார். அடுத்தடுத்து இரு குழந்தைகள் உயிரிழந்தது கிராம மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியதையடுத்து, தந்தை புத் சிங் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. கணவரைப் பிரிந்து வாழ்ந்த ஜெஸ்ஸி கவுருக்கு, ஜஸ்மித் சிங் என்பவருடன் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்துள்ளது. இவர்களது தனிமைக்கு குழந்தைகள் இடையூறாக இருந்ததால், அவர்களைத் தீர்த்துக்கட்ட ஜெஸ்ஸி கவுர் திட்டமிட்டுள்ளார். இதற்காக குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவில் எலி மருந்து (விஷம்) கலந்து கொடுத்து, அவர்களைத் துடிக்கத் துடிக்கக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இந்தக் கொடூரக் கொலைக்கு உடந்தையாக இருந்த ஜெஸ்ஸி கவுர் மற்றும் அவரது தங்கை மோட்டோ கவுர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் ஜஸ்மித் சிங்கை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இன்பத்திற்காகப் பெற்ற பிள்ளைகளையே நஞ்சு கொடுத்துக் கொன்ற தாயின் செயல் அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…