நீ எல்லாம் ஒரு பெத்த தாயா?… தினம் தினம் சொத்து கேட்டு டார்ச்சர் செய்த மகன்… கூலிப்படையை ஏவி கொடூரமாக கொலை செய்த தாய்…!

By Nanthini on கார்த்திகை 11, 2025

Spread the love

சொத்தை பிரித்து தரும்படி தொல்லை கொடுத்த மகனை கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளி மண்டலம் பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த சியாமளமாம்மா(41) என்பவர் வெங்கட சிவா ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஜெயப்பிரகாஷ் ரெட்டி (23) மற்றும் கிரிவர்தன் ரெட்டி ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். வெங்கடசிவா ரெட்டி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் இரண்டாம் ஆண்டு எம்பிஏ படிக்கும் பிரகாஷ் ரெட்டி 4 மாதங்களாக மதுவுக்கு அடிமையாகி கல்லூரிக்கு செல்லவில்லை. தினமும் தனது தாயுடன் சண்டையிட்டு சொத்துக்களை பிரித்து தரும்படி வற்புறுத்தியுள்ளார்.

இதனால் தொல்லை தாங்க முடியாமல் அவருடைய தாயார் மூன்று மாதங்களுக்கு முன்பு தனது இளைய மகனுடன் தனது பிறந்த ஊருக்குச் சென்றுள்ளார். இந்த மாதம் ஆறாம் தேதி ஜெயப்பிரகாஷ் ரெட்டி அங்கு சென்று சொத்து தொடர்பாக மீண்டும் தனது தாயாருடன் தகராறு செய்துள்ளார். இப்படியான நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அதிகாலையில் அங்குள்ள பகுதியில் ஜெயப்பிரகாஷ் ரெட்டி இறந்து கிடந்தார். உடனே தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தியதில் தாயே மகனை கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரிய வந்தது. எதற்காக 6 லட்சம் ரூபாய் அவர் பணம் கொடுத்துள்ளார்.

   

இதனைத் தொடர்ந்து ஐந்து பேர் கொண்ட கும்பல் திட்டமிட்டு ஜெயப்பிரகாஷ் ரெட்டியை அழைத்து மது கடையில் பீர் வாங்கி கொடுத்து அவரை தனியாக அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். அதனால் அவர் உயிரிழந்த நிலையில் பிறகு உடலை சாலையோரம் வீசி சாலை விபத்து போல சித்தரித்தனர். இந்த உண்மை தற்போது போலீசாருக்கு தெரிய வர போலீசார் வழக்கு பதிவு செய்து தாய் உட்பட 8 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.