தமிழகத்தில் மீண்டும் வெளுக்கப்போகும் கனமழை… வந்தது மஞ்சள் அலர்ட்…!

By Nanthini on கார்த்திகை 11, 2025

Spread the love

தெற்கு கேரளா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தென் மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வரும் நிலையில் செங்கல்பட்டு, சென்னை, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி, நெல்லை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களில் இரவு 7:00 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதே சமயம் நாளை தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் நவம்பர் 13 முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.