“தாயை மீறிய சக்தி எதுவுமில்லை” ஒரு கையில் உணவு, மறு கையில் புற்றுநோயோடு போராடும் மகள்… ஒரே வீடியோவால் இன்ப அதிர்ச்சியில் உணவு டெலிவரி செய்யும் பெண்..!!

By Soundarya on ஆவணி 5, 2025

Spread the love

சீனாவைச் சேர்ந்த 25 வயது பெண் ஜு. இவருக்கு நான்கு வயதில் நுவோஷி என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மகள் உள்ளார். தன்னுடைய மகளின் சிகிச்சைக்காக பணத்தை சேர்ப்பதற்காக உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். ஜூபகுதி நேரமாக வேலை செய்து வருகிறார். அவர் வேலைக்கு செல்லும் பொழுது தன்னுடைய மகளையும் உடன் அழைத்துச் செல்கிறார். ஒரு கையில் உணவையும், மற்றொரு கையில் தன்னுடைய குழந்தையை தூக்கிக்கொண்டு மாடி படிகளில் ஏறி செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆனது.

இந்த வீடியோ தாய்மையின் தியாகத்தையும் அவருடைய மன உறுதியையும் உலகுக்கு உணர்த்தியது. இந்த வீடியோவையடுத்து ஜூ மற்றும் அவருடைய மகளுக்கு பலரிடமிருந்து நிதியுதவிகள் குவிந்தது. ஒரே ஒரு வீடியோ மூலம் அவருடைய மகளின் சிகிச்சைக்கான பணம் கிடைத்தது. ஒரு தாயின் போராட்டத்தை இணையத்தின் மூலமாக உலகம் முழுவதும் கொண்டு சென்ற இந்த சம்பவம் டிஜிட்டல் உலகத்தின் வலிமையும், அது ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கத்தையும் எடுத்துக்காட்டுகிறது.