சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே கள்ளக்காதலனுடன் வாழ்வதற்குத் தடையாக இருந்த ஒன்றரை வயதுக் குழந்தைக்கு உணவில் விஷம் வைத்துக் கொன்ற தாயை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். வரகூர் தெற்கு காடு பகுதியைச் சேர்ந்த திருமலை வாசுதேவன் என்பவருக்கும், லலிதா (21) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு மகன்கள் இருந்தனர். குடும்பத் தகராறு காரணமாகக் கணவரைப் பிரிந்து லலிதா தனது தாய் வீட்டிற்குச் சென்றார். அங்குத் தனது வாழ்வாதாரத்திற்காக மேஸ்திரி வேலைக்குச் சென்றபோது, அவருடன் வேலை பார்த்த ஆனந்தன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.
ஆனந்தனுடன் அடிக்கடி தனிமையில் இருந்து வந்த லலிதாவை, குழந்தையைக் கவனிக்காமல் செல்வதாகக் கூறி உறவினர்கள் கண்டித்துள்ளனர். இதனால், தங்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் தனது ஒன்றரை வயதுக் குழந்தை புவன்ராஜ் இடையூறாக இருப்பதாக லலிதா கருதியுள்ளார். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் குழந்தைக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டுவிட்டதாகக் கூறி, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அந்தப் பிஞ்சு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
குழந்தையின் மரணத்தில் மருத்துவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டதால் உடற்கூறாய்வு (பிரேத பரிசோதனை) செய்யப்பட்டது. அதில், குழந்தைக்கு விஷம் கொடுக்கப்பட்டுதான் உயிரிழந்தது என்பது உறுதியானது. இதுகுறித்து தலைவாசல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த லலிதாவைத் தனிப்படை அமைத்துத் தேடி இறுதியாகக் கைது செய்தனர். கள்ளக்காதலனுடன் வாழ்வதற்குத் தடையாக இருந்ததால், சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு வலிப்பு வந்தது போல் நாடகமாடியதை லலிதா ஒப்புக்கொண்டார். பெற்ற குழந்தையையே தாயே விஷம் வைத்துக் கொன்ற இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…
தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…
தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…