“அவன் கூடவே இருக்கணும்…” பெற்ற மகளுக்கு கள்ளக்காதலனை கட்டாய திருமணம் செய்து வைத்த 42 வயது தாய்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, தனது 18 வயது மகளைக் கடத்திச் சென்று தனது கள்ளக்காதலனுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைத்த தாயின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவனை இழந்த 42 வயதான சித்ரா என்பவர், தனது சென்ட்ரிங் தொழிலாளி கந்தனுடன் இருந்த கள்ளத்தொடர்பை மறைக்கவும், அவருடனேயே இருக்கவும் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

கடந்த 13-ம் தேதி நள்ளிரவில் மகளின் வாயில் துணியை வைத்துத் திணித்து, வலுக்கட்டாயமாக அவரைக் கேரளாவுக்குக் கடத்திச் சென்றுள்ளனர். அங்குள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் வைத்து கந்தன் அந்த இளம்பெண்ணுக்குக் கட்டாயத் தாலி கட்டியதுடன், அவரைப் பலாத்காரமும் செய்துள்ளனர்.

தலைமறைவாக இருந்த இவர்களைச் செல்போன் சிக்னல் உதவியுடன் கேரளாவில் வைத்து மடக்கிப் பிடித்த காவல்துறையினர், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டுத் திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தனர். விசாரணையில், தனது தாயே இந்தக் கொடுமைகளுக்கு உடந்தையாக இருந்ததாக அந்தப் பெண் வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து, சித்ரா மற்றும் அவரது கள்ளக்காதலன் கந்தன் ஆகியோர் மீது கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மீட்கப்பட்ட பெண் அவரது மூத்த சகோதரியிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளார். பெற்ற மகளின் வாழ்க்கையையே சீரழித்த தாயின் இந்த அத்துமீறல் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Devi Ramu

Recent Posts

லேசாக கண் அசைத்த புதின்… “ஒரே நள்ளிரவில் 600 ட்ரோன்கள், 90 ஏவுகணைகள்”… உக்ரைன் தலைநகரை சுடுகாடாக்கிய ரஷ்யாவின் பழிவாங்கும் ஆட்டம்….!

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், சமீபத்திய வாரங்களில் இல்லாத அளவுக்கு…

1 minute ago

“5 இல்ல 50 வருஷம்” பொறுத்திருந்து பாருங்க பாஸ்..! அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த மரண பதிலடி… கொந்தளிக்கும் எதிர்க்கட்சியினர்…!!

தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி வெறும் ஐந்து ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு, பள்ளிக்கல்வித்துறை…

4 minutes ago

செங்கோட்டையனுக்கு ICU-வில் சிகிச்சை… காலையிலேயே ஷாக் நியூஸ்….!

உடல்நலக்குறைவு காரணமாகக் கோவை கே.எம்.சி.ஹெச் (KMCH) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) தொடர்ந்து மருத்துவக்…

5 minutes ago

“வேலுமணிக்கு கதவை மூடிய அமித்ஷா”… டெல்லியில் இருந்து வந்த ‘அந்த’ ஒரு போன் கால்… ஆடிப்போன கோவை தம்பி….!

தமிழக அரசியல் களம் தற்போது பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, அதிமுகவின் எஃகுக் கோட்டையாகக் கருதப்பட்ட…

8 minutes ago

கண்ணதாசனா, காளிதாசனா.. இது என்னப்பா CM விஜய்க்கு வந்த சோதனை… 34 அமைச்சர்களும் அலசி அலசி ஆராயறாங்களாமே….!

தமிழக அரசியல் களம் தற்போது புதிய அமைச்சர்களின் வருகையாலும், அவர்களின் ஆரம்பக்கட்ட செயல்பாடுகளாலும் பரபரப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள்…

11 minutes ago

பாஜகவின் “கனெக்டிங் கால்” ரகசியம்..! எடப்பாடியை முதல்வராக்க துள்ளிக் குதித்த உதயநிதி.. ஆளுநர் கொடுத்த அசைன்மென்ட்… மே 4 துரோகத்தை உடைத்தெறிந்த காங்கிரஸ்..!!

முன்னதாக நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், பாஜகவின் வெற்றிக்கு மோடியோ அல்லது அமித்ஷாவோ காரணமல்ல, காங்கிரஸ்தான்…

12 minutes ago