திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அடுத்த மூலக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த 60 வயது சிவன் மற்றும் 57 வயது வைரம்மாள் தம்பதியினர், தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களது மூத்த மகளுக்குத் திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வந்த நிலையில், 22 வயதுடைய இளைய மகள் அமுதா பெற்றோருடன் வசித்து வந்தார். திருமணத்திற்குப் பிறகு மூத்த மகள் தனது கணவருடன் அவ்வப்போது பெற்றோர் வீட்டிற்கு வந்து ஓரிரண்டு நாட்கள் தங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்தச் சூழலில், அமுதாவுக்கும் அவரது அக்கா கணவருக்கும் (மாமா) இடையே ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் திருமணத்திற்கு மீறிய கள்ள உறவாக மாறியுள்ளது. பெற்றோர் விவசாய நிலத்திற்குச் சென்ற பிறகு, வீட்டில் தனியாக இருக்கும் அமுதா தனது மாமாவை வரவழைத்து அவருடன் தனிமையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் அடிக்கடி சந்திப்புகளால் சந்தேகமடைந்த அக்கா, தனது கணவரைக் கண்காணித்தபோது அமுதாவுடன் அவர் தவறான உறவில் இருந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
இது குறித்து அக்கா தனது தாய், தந்தையிடம் புகார் அளிக்கவே, அவர்கள் அமுதாவை கடுமையாகக் கண்டித்துள்ளனர். இருப்பினும், அமுதா தனது மாமாவுடனான உறவைத் தொடர்ந்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிவன் மற்றும் வைரம்மாள், கடந்த மே 30-ஆம் தேதி வீட்டில் இருந்த அமுதாவை மிரட்டி பூச்சி மருந்தைக் கொடுத்துக் கொலை செய்ய முயன்றனர். ஆனால், பூச்சி மருந்து குடித்தும் அமுதா உயிரிழக்காமல் போராடியதால், ஆத்திரமடைந்த பெற்றோர் அவரது கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். அப்போது அமுதா தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடியதில் அவரது கழுத்தில் நகக் கீறல்கள் ஏற்பட்டுள்ளன.
மறுநாள் காலை வரை காத்திருந்த பெற்றோர், தங்களது மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக நாங்குநேரி போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றிய போலீசார், அமுதாவின் கழுத்தில் இருந்த நகக் கீறல்களைப் பார்த்து சந்தேகமடைந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், தாங்கள் தான் மகளைக் கொலை செய்தோம் என்பதைச் சிவன் மற்றும் வைரம்மாள் தம்பதியினர் ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, பெற்ற மகளையே விஷம் கொடுத்துக் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன், மனைவி இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…