“வெறும் 10 ஆயிரம் ரூபாய்க்காக இப்படியா?”… தாய், 13 வயது மகளை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்… கிருஷ்ணகிரியை உலுக்கிய பயங்கரம்….!

By Nanthini on தை 11, 2026

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் பாஞ்சாலியூர் கிராமத்தில் கடன் தகராறு காரணமாக தாய் மற்றும் மகள் இருவரும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த எல்லம்மாள் (42) வட்டிக்கு பணம் கொடுத்து வந்த நிலையில், அவரிடம் சத்ய அரசு (24) என்பவர் 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். நீண்ட நாட்களாகியும் கடனைத் திருப்பிக் கொடுக்காததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சத்ய அரசு, தனது நண்பர்களான நவீன்குமார் (23) மற்றும் 17 வயது சிறுவன் ஒருவருடன் சேர்ந்து எல்லம்மாள் வீட்டிற்குள் புகுந்து அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தார். அப்போது இதைக் கண்டு சத்தமிட்ட எல்லம்மாளின் 13 வயது மகளையும் அவர்கள் விடாமல் கொலை செய்துவிட்டு, 10 சவரன் நகையுடன் தப்பியோடினர். இந்த இரட்டை கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த கிருஷ்ணகிரி காவல்துறையினர், குற்றவாளிகளைப் பிடிக்க 8 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். விசாரணையின் அடிப்படையில், காவேரிப்பட்டினம் அருகே மறைந்திருந்த சத்ய அரசு, நவீன்குமார் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய மூவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

   

கைதானவர்களிடம் இருந்து திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டன. பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பணத்திற்காகத் தாயையும் மகளையும் கொடூரமாகக் கொன்ற இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.