ஒரு டிகிரி வாங்கவே இங்க நாக்கு தள்ளுது.. மனுஷன் இவ்வளவு படிச்சிருக்கரே.. இந்தியாவிலேயே அதிகமாக படித்த நபர் இவர்தானா..?

By Nanthini on ஆனி 19, 2025

Spread the love

மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்தான் ஸ்ரீகாந்த் ஜிச்கர். இந்திய வரலாற்றில் மிகவும் படித்த நபராக இவர் கருதப்படுகின்றார். நாக்பூரில் எம்பிபிஎஸ் மற்றும் MT பட்டம் பெற்றதன் மூலமாக தன்னுடைய கல்வி பயணத்தை தொடங்கிய இவர் மொத்தம் இதுவரை 20 பட்டங்களை பெற்றுள்ளார். இதில் வணிக நிர்வாகம் மற்றும் சர்வதேச சட்டத்தில் முதுகலை பட்டம், வணிக நிர்வாகத்தில் முனைவர் பட்டம், இதழியலில் இளங்கலை பட்டம் மற்றும் சமஸ்கிருதத்தில் இலக்கியத்தில் முனைவர் பட்டம் ஆகியவை அடங்கும். இப்படியான நிலையில்தான் மருத்துவராக பணியாற்றிய சமயத்தில் 1978 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்றான யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐபிஎஸ் ஆனார்.

இந்தியாவிலேயே அதிகமாக படித்த நபர்.., யார் தெரியுமா? | Most Educated Person In India

   

ஆனால் இரண்டு ஆண்டுகளில் அந்த பணியை ராஜினாமா செய்துவிட்டு பிறகு யுபிஎஸ்சி தேர்வு எழுதி மீண்டும் ஐஏஎஸ் ஆனார். அதன்படி ஐஏஎஸ் பணியில் சேர்ந்த 4 மாதத்தில் அதனையும் ராஜினாமா செய்தார். ஐஏஎஸ் பணியை ராஜினாமா செய்த நான்கு மாதத்தில் வந்த மகாராஷ்ட பொது தேர்வில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். அப்போது அவருக்கு 26 வயது தான். அதுமட்டுமல்லாமல் இளம் வயதில் எம்எல்ஏ ஆன முதல் இந்தியரும் இவர்தான். பிறகு சட்ட மேலவை எம்எல்ஏ, வாணி அமைச்சர் மற்றும் ராஜ்ய சபா எம்பி என்று பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார். இப்படி பல படிப்புகளையும் பதவிகளையும் வகித்த இவர் தனது 49 வயதில் கார் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.