பெண்களை ஏமாற்றி 13,500 ஆபாச வீடியோக்கள்.. போலீஸ் வலையில் சிக்கிய கொடூரன்..!

By Nanthini on ஆனி 19, 2025

Spread the love

கடந்த இரண்டு வருடங்களாக போலீசார் வலைவீசி தேடி வந்த பாலியல் குற்றவாளி சிக்கி உள்ளார். பெண்களிடம் வீடியோ கார்டில் பேசி பிறகாதன எடிட் செய்து ஆபாசமாக மாற்றி சோசியல் மீடியாவில் பெண்கள் பெயர்களில் பதிவிட்டு மிரட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார் ஷீபம் குமார். இதற்காக 90 போலி இமெயில் ஐடி,10 போலி ப்ரொபைல்கள் பயன்படுத்தி வந்துள்ளார்.

இது தொடர்பாக பெண்கள் பலரும் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த நபரை தேடி வந்தனர். இப்படியான நிலையில் இவரை மும்பை போலீசார் கர்நாடகாவில் வைத்து கைது செய்துள்ளனர். அது மட்டுமல்லாமல் இவருடைய மொபைலில் இருந்து பெண்களின் 13 ஆயிரத்து 500 வீடியோக்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் செய்தி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.