BREAKING: 1000-க்கும் மேற்ப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது … தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடி..!!

By Soundarya on மார்கழி 26, 2025

Spread the love
தமிழகத்தில் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒற்றைக்கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட 1,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இந்தப் போராட்டத்தில், திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண்-311-ன்படி ஊதிய முரண்பாடுகளைக் களைவதாகக் கொடுத்த உறுதிமொழி என்னவானது எனக் கேள்வி எழுப்பி ஆசிரியர்கள் முழக்கமிட்டனர்.
அண்மையில் இதே போன்ற கோரிக்கைகளுடன் MRB செவிலியர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, தற்போது ஆசிரியர்களின் இந்தப் போராட்டம் அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.