தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளை அதிமுகவிடம் கேட்பதற்கு பின்னால் ஒரு தீர்க்கமான நீண்ட கால அரசியல் வியூகம் இருப்பதாக தெரிகிறது. வெறும் கட்சியாக மட்டுமல்லாமல் தமிழக சட்டமன்றத்தில் கணிசமான எண்ணிக்கையிலான பாஜக உறுப்பினர்களை அமர வைப்பதன் மூலமாக மாநிலத்தில் கட்சியின் அடித்தளத்தை வலுவாக டெல்லி மேலிடம் திட்டமிட்டுள்ளது. அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக களம் இறங்கி அதிமுக தலைமைக்கு கடும் அழுத்தத்தை கொடுத்து வருகிறாராம்.
பீகார் அல்லது மகாராஷ்டிரா பாணியில் கூட்டணியில் சரிபாதி இடங்களை பெற்று எதிர்காலத்தில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைப்பதற்கான வாசலை திறப்பதே இவர்களின் நோக்கமாக தெரிகிறது. அதிமுகவின் வாக்கு வங்கியை பயன்படுத்தி தன்னுடைய பலத்தை நிரூபிப்பதற்கு பாஜக முயற்சிப்பது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு பெரிய சவாலாக மாறி உள்ளது. இந்த தொகுதி பங்கீடு நெருக்கடி தமிழகத்தின் திராவிட அரசியல் களத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தற்போதைய பேசு பொருளாகியுள்ளது.
