ஐயோ நெஞ்சே பதறுது… பிறந்து 15 நாட்களே ஆன பிஞ்சு குழந்தையை பிரிட்ஜில் வைத்த தாய்… அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 11, 2025

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பிறந்து 15 நாட்களே ஆன குழந்தையை தாய் பிரிட்ஜில் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திடீரென்று குழந்தையின் அழுகை சத்தத்தை கேட்ட குடும்பத்தினர் பிரிட்ஜில் இருந்த குழந்தையை மீட்டனர். குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிகிறது. பிரசவத்திற்குப் பிறகு அந்தப் பெண்ணுக்கு லேசான மனநிலை பாதிப்பு இருந்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.

இது பிரசவத்திற்குப் பிறகு நான்கு முதல் எட்டு வாரங்களுக்கு இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த Postpartum depression நோய் எனப்படுகிறது. அந்தப் பெண்ணுக்கு மனநல மருத்துவமனையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.