மகளிரே ரெடியா?… மாதம்தோறும் ரூ 2,500 உரிமைத் தொகை… அமைச்சர் வெளியிட்ட மெகா அப்டேட்…!!

By Swetha on ஆடி 28, 2026

Spread the love

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் விழா ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது. எம்.எல்.ஏ-க்கள் செல்வம், கார்த்திக் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று 3,428 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினர். விழாவில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, மாவட்டத்தில் வெற்றி பெற்றுள்ள பிரதிநிதிகள் நால்வரும் மாவட்டத்தின் தூண்களாகச் செயல்பட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, மகளிருக்கு மாதம்தோறும் வழங்கப்படும் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அது விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை எளிதாகத் தெரிவிக்கும் வகையில் ‘விஜய் விஜயம்’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மனு அளித்தால் 24 மணி நேரத்திற்குள் பதில் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

   

இதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கில் புதிதாக அமைக்கப்பட்ட கிரிக்கெட் உள் விளையாட்டு அரங்கை அமைச்சர்கள் திறந்துவைத்தனர். முன்னதாக, சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் நடைபெற்ற பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கான காசோலைகளை வழங்கி அமைச்சர்கள் தங்கள் ஆறுதலைத் தெரிவித்தனர்.