“கணவருடன் சென்ற பெண்…” பாலியல் தொந்தரவு அளித்த இன்ஸ்பெக்டர்… அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் அதிகாரி… சென்னையில் அரங்கேறிய சம்பவத்தால் பரபரப்பு…!!

By Devi Ramu on ஆடி 28, 2026

Spread the love

சென்னை வேளச்சேரி ஒரண்டியம்மன் கோயில் தெருவில் தனது கணவருடன் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவருக்கு, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் தகாத முறையில் பாலியல் தொல்லை கொடுத்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் உடனடியாகத் தன் கணவருடன் சென்று வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அத்துமீறலில் ஈடுபட்ட வாகனத்தின் பதிவு எண் கண்டறியப்பட்டது.

அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இக்கொடூரச் செயலில் ஈடுபட்டது தமிழகக் காவல்துறையில் ராணிப்பேட்டை போக்குவரத்துப் பிரிவில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வரும் மணிமாறன் என்பது வெளிச்சத்திற்கு வந்தது. இவர் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிச் சென்னையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து அறியவந்த காவல்துறை உயரதிகாரிகள் சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனக்கூறி விசாரணைக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மணிமாறனை காவல் நிலையம் அழைத்து வந்து வேளச்சேரி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.