“அட கடவுளே என்ன இது…? சுற்றுலாப் பயணிகளின் அலட்சியம்… பீர் பாட்டில்களைக் கடித்துக் குதறும் குரங்குகள்… சமூக வலைதளங்களில் நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!”

By Swetha on ஆனி 24, 2026

Spread the love

இந்தோனேசியாவின் பிரபலமான சுற்றுலாத் தலமான லோம்போக் தீவில் உள்ள ஒரு கடற்கரையில், குரங்குகள் மனிதர்களைப் போல பீர் பாட்டில்களைக் கையில் வைத்துள்ள விசித்திரமான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணும் குரங்குகள், கடற்கரையில் உள்ள பீர் பாட்டில்களைக் கையாளுவது அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், இரண்டு குரங்குகள் கடற்கரை மணலில் அமர்ந்து பீர் பாட்டில்களைத் திறந்து குடிக்க முயற்சிப்பதைக் காண முடிகிறது. அதில் ஒரு குரங்கு பாட்டிலை வாயில் வைத்து உறிஞ்ச முயல்கிறது, மற்றொரு குரங்கு பாட்டிலின் மூடியைக் கடிக்க முயல்கிறது. இந்த குரங்குகள் ‘ஹேப்பி ஹவர்ஸ்’ கொண்டாட வந்துவிட்டனவா என்று நெட்டிசன்கள் கிண்டலாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

   

இருப்பினும், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் தாங்கள் பயன்படுத்திய பீர் பாட்டில்களையும் குப்பைகளையும் கடற்கரையிலேயே வீசிச் செல்வதால் தான் வனவிலங்குகள் இது போன்ற பழக்கங்களுக்கு ஆளாகின்றன என்றும், இது அவற்றின் ஆரோக்கியத்திற்குப் பேராபத்தை விளைவிக்கும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் தங்களது கவலைகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.