மகளை மீட்டெடுப்பாரா தந்தை?… மோனாலிசா போஸ்லே விவகாரத்தில் வெடித்த ‘லவ் ஜிஹாத்’ சர்ச்சை.. அதிர்ச்சியை கிளப்பும் பின்னணி…!!!

By Rajeshwari on பங்குனி 19, 2026

Spread the love

மகாக்கும்பில் ‘வைரல்’ மங்கையாக அறியப்பட்ட மோனாலிசா போஸ்லே மற்றும் நடிகர் ஃபர்மான் கான் ஆகியோரின் திருமணம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோனாலிசாவின் தந்தை ஜெய் சிங் போஸ்லே, இது ஒரு திட்டமிட்ட ‘லவ் ஜிஹாத்’ என்று குற்றம் சாட்டி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

மேலும் தனது மகளை ஃபர்மான் ஏமாற்றி, ஆசை வார்த்தைகளை கூறி இந்த மதமாற்ற திருமணத்திற்குள் ஈர்த்துள்ளதாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் கேரளாவைச் சேர்ந்த சில நபர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், இது ஒரு பெரிய சதித் திட்டத்தின் ஒரு பகுதி என்றும் மோனாலிசாவின் தந்தை பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

   

இந்நிலையில் தனது மகள் ஒரு வலைக்குள் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில், போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.