ஆன்மீக சாராம்சம் மற்றும் பெரும் கூட்டத்திற்கு பெயர் பெற்ற பிரயாக்ராஜில் நடைபெறும் மஹாகும்பமேளாவில் சமீபத்தில் ஒரு ஊசிமணி விற்கும் பெண் தனது அழகிய கண்களால் வைரலாகி விட்டார். பக்தர்கள் “தங்கள் பாவங்களைக் கழுவ” கூடும் திரிவேணி சங்கமத்தில் உள்ள புனிதமான சூழ்நிலையில், இந்தூரைச் சேர்ந்த ஒரு இளம் பெண் எதிர்பாராத விதமாக சமூக ஊடகங்களில் வைரலானார். இதுவரை சுமார் 8.81 கோடி பேர் மகா கும்பமேளாவிற்கு வருகை தந்து புனித நீராடியுள்ளனர். இந்த வருடம் மொத்தமாக 40 கோடி பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் தான் இப்பெண் வைரலாகிவிட்டார். அவரது அம்பர் நிற கண்கள், அடர் நிறம் மற்றும் தனித்துவமான பேச்சு முறை ஆகியவற்றை எடுத்துக்காட்டும் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகிவிட்டன. அவரது பெயர் மோனாலிசா என்பது இணையவாசிகளை, பெரும்பாலும் ஆண்களை அவர் மீது அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.

சிலர் அவரது “இயற்கை அழகை” கொண்டாடிய அதே வேளையில், ஆண் செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் பார்வையாளர்கள் புனித நிகழ்வை அவருடன் புகைப்படம் எடுப்பதற்காக மாற்றியதை பலரும் விமர்சித்தார்கள். திரைபட நடிகைகளை போன்று இல்லாமல் எதார்த்தமான அழகோடு மிளிரும் மாநிறத்தில் தனித்துவமான கண்களுடன் பாசி மாலைகள் விற்கும் இவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வந்தது.

இந்த நிலையில் 16 வயது பெண் மோனாலிசா போஸ்லே பாலிவுட் இயக்குனர் மனோஜ் மிஸ்ரா இயக்கத்தில் தயாராகும் அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கும்பமேளாவில் ருத்ராட்சை உள்ளிட்ட பொருட்களை விற்று வந்த இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
