தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்ற எந்த பாரபட்சமும் இவர் காட்டுவதில்லை.
தனக்கு ஒரு கதாபாத்திரம் பிடித்து விட்டால் அதை ஏற்று எந்தவோரு ரோலிலும் நடித்து வருகிறார். இறுதியாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் இவர் தொகுத்து வழங்கினார்.
விஜய் சேதுபதி சினிமாவில் நடிகராக அறிமுகவாதற்கு முன்னால் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளார். அதே போல சினிமாவில் துணை நடிகராக பல படங்களில் நடித்துள்ளார். அதில் புதுப்பேட்டை, எம் குமரன் S/O மகாலட்சுமி உள்ளிட்ட ஹிட் படங்களும் அடக்கம்.
இந்நிலையில் எம் குமரன் படத்தில் விஜய் சேதுபதி நடித்தது பற்றி பேசியுள்ளார். அதில் “எம் குமரன் படத்தில் விஜய் சேதுபதி நடித்தது எல்லாம் எனக்கு சுத்தமாக ஞாபகம் இல்லை. பல ஆண்டுகள் கழித்து அவர் ஹீரோவான பின்னர் ஒருநாள் என்னை சந்தித்த போது கேட்டார் “சார், நான் ரவி அறிமுகக் காட்சியில் கூட்டத்தில் ஒருவனாக நடித்திருந்தேன். ஞாபகம் இருக்கா?” என்று கேட்டார்.
எனக்கு சத்தியமாக ஞாபகம் இல்லை. அப்புறம் எந்த காட்சி என்று அவர் குறிப்பிட்டு சொன்னார். அதன் பின்னர் அவர் சொன்னார் “அப்போதெல்லாம் துணை நடிகர்களுக்கு 500 ரூபாய்தான் கொடுப்பார்கள். ஆனால் நீங்கள்தான் முதல் முதலாக 750 ரூபாய் கொடுத்தீர்கள் என்று சொன்னார். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது” எனக் கூறியுள்ளார்.
தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கட்சியின் மூத்த தலைவர்களான டி.ஆர்.பாலு, கனிமொழி மற்றும் திருச்சி…
ஆந்திர மாநிலம் நகரிக்கல்லு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு 3 மகள்களுடன்…
ஜூன் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள 'இண்டியா' கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது. கடந்த…
மதுரை அண்ணா நகர் பகுதியில் தனியாக வசித்து வரும் முதியவர் ஒருவரை, ஸ்வீடனில் இருந்து வந்த அவசர அழைப்பின் பேரில்…
கர்நாடகாவில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த முதல்வர் நாற்காலிப் போட்டி ஒருவழியாக முடிவுக்கு வந்து, டி.கே. சிவகுமார் புதிய முதல்வராகப்…
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, தமிழக அரசியல் சூழல், வரவிருக்கும் மாநிலங்களவை (ராஜ்யசபா)…