நடிகர் மோகன், பல படங்களில் மைக் பிடித்த பாடியதால் மைக் மோகன் என அழைக்கப்படுகிறார். அந்த காலத்திலேயே வெள்ளிவிழா நாயகன் என்றால் அது மோகன்தான். அவருக்கு இளம்பெண் ரசிகைகளும் மிக அதிகளவில் அப்போதே இருந்தனர். நடிகர் மோகன், ஒரு கட்டத்தில் மார்க்கெட் இழந்த பிறகு சுட்டப்பழம், அன்புள்ள காதலுக்கு என்ற இரண்டு படங்களை சொந்த செலவில் தயாரித்து கையை சுட்டுக்கொண்டார். அதுவும் அன்புள்ள காதல் படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து பலத்த அடி வாங்கியவர் மோகன்.
மோகன் பெங்களூருவை சேர்ந்தவர். அவருக்கு தமிழ் பேசத் தெரியாது. ஆனால், படங்களில் அழகாக தமிழ் பேசுவார். அதற்கு காரணம் அவருக்கு பின்னணி பேசிய குரலுக்கு சொந்தக்காரர் பாடகர் எஸ்.என் சுரேந்தர். இவர், நடிகர் விஜயின் தாய்மாமா என்பது கூடுதல். அதாவது விஜய் அம்மா ஷோபா சந்திரசேகரின் சகோதரர். மோகன் அந்த காலத்தில் காதலை மையப்படுத்திய படங்களில் அதிகளவில் நடித்தார். அந்த படத்தின் பாடல்கள் இளையராஜா இசையில், தேனில் விழுந்த பலாச்சுளையாக இனித்தன என்றால் அது மாபெரும் உண்மை. மோகன் படங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு இளையராஜாவும் ஒரு முக்கிய காரணம்.
நடிகர் மைக் மோகன் குறித்து, நடிகர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியதாவது, ஒரு கட்டத்தில் நடிகர் மோகனுக்கு எய்ட்ஸ் என்ற வதந்தியை சிலர் கிளப்பி விட்டனர். முதலில் அமைதியாக இருந்த மோகன், பின்னர் இதற்கு மறுப்பு தெரிவித்தார். மோகனின் மனைவி ஒரு ஹோம் டிசைனர். ஆனால் அவர் தன் மனைவியுடன் ஒரு புகைப்படத்தை கூட இதுவரை வெளியிடவில்லை. அவர் மனைவி, பிள்ளைகள் குறித்து எதுவுமே யாருக்கும் தெரியாது.
அவற்றை இன்னமும் ரகசியமாக வைத்திருக்கிறார். மோகன், ராமராஜனை போலவே நடித்தால் ஹீரோவாக நடிப்பேன் என்ற பிடிவாதத்தால் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தார். அரசியலுக்கு வருமாறு தமிழகத்தின் முக்கிய கட்சிகள் அழைத்தும் அவர் அரசியலுக்கு வரவில்லை, என்று கூ;றியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…
பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…
கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…
இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…