நடிகை நயன்தாரா தமிழின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். இவர் தனது ரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறார் .முதன் முதலில் மலையாள திரை உலகில் அறிமுகமான இவர், தொடர்ந்து 2005 இல் வெளியான ‘ஐயா’ திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து அவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது.
தமிழ் மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார். முன்னணி நடிகையான இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தற்பொழுது இவர்கள் தங்கள் இரட்டைக் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ஜவான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், அனைத்தையும் தன் நடிப்பால் தெறிக்கவிட்டு அசத்தி வருகிறார் நடிகை நயன்தாரா.
தன் கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து 9skin என்ற கம்பெனி ஒன்றையும் புதிதாக தொடங்கியுள்ளார் நடிகை நயன்தாரா. இப்படி பிசினஸ் , சினிமா என பிசியாக இருக்கும் நடிகை நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்த்து கூறி அவரது கணவரான விக்கி வெளியிட்ட எமோஷனல் வீடியோவானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…
நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…
30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…
தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…