ஷாக்கில் முகமது ஷமி… மீண்டும் கோர்ட்டுக்கு போன முன்னாள் மனைவி…! இதுதான் விஷயமா…?

By Devi Ramu on கார்த்திகை 8, 2025

Spread the love

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மாதம் 4 லட்சம் ரூபாய் பராமரிப்புத் தொகை கொடுப்பது போதாது என்றும் கூடுதல் தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அவரது முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கு விளக்கம் அளிக்குமாறு ஷமிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முகமது ஷமி 2014இல் ஹசின் ஜஹானைத் திருமணம் செய்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு குடும்ப தகராறு  குற்றச்சாட்டால் ஹசின் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவாகி விசாரணை நடந்த நிலையில்  இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். அப்போது அலிப்பூர் நீதிமன்றம் ஷமி மனைவிக்கு மாதம் 50,000 ரூபாயும் மகளுக்கு 80,000 ரூபாயும் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட்டது.

   

இதை எதிர்த்து ஹசின் ஜஹான் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து மாதம் 10 லட்சம் கேட்டார். உயர் நீதிமன்றம் கடந்த ஜூலையில் ஹசினுக்கு 1.50 லட்சமும் மகளுக்கு 2.50 லட்சமும் என மொத்தம் 4 லட்சம் ரூபாய் மாதாந்திர பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட்டது.

   

இப்போது 4 லட்சம் போதாது என்றும் ஷமியின் வருமானம், மகளின் எதிர்காலம், தான் வாழ்ந்த வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கூடுதல் தொகை வழங்க வேண்டும் என்றும் ஹசின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

 

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, மாதம் 4 லட்சம் பெரிய தொகை இல்லையா, இது போதாதா என்று கேள்வி எழுப்பியது. இரு தரப்பும் சமரசமாகத் தீர்வு காணுங்கள் என்றும் கூறியது. ஷமி மற்றும் மேற்கு வங்க அரசு நான்கு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பருக்கு ஒத்திவைத்தது.