உங்க வாகனத்திற்கு அபராதம் இருக்கா…? ஆன்லைனில் ஒரு நிமிடத்தில் செக் பண்ணலாம்…. இதோ எளிய வழி…!!

By Devi Ramu on கார்த்திகை 8, 2025

Spread the love

மின்னணு அபராதச் சீட்டு என்பது தானியங்கி கணினி மூலம் உருவாக்கப்படுகிறது. AI கேமராக்கள் விதிமீறலைப் பதிவு செய்தாலோ அல்லது களத்தில் இருக்கும் போலீஸ் அதிகாரி தனது சாதனத்தில் பதிவு செய்தாலோ இந்தச் சீட்டு தயாராகும். இந்த அபராத விவரங்கள் மத்திய அரசின் தரவுத்தளத்தில் சேமிக்கப்பட்டு, உங்கள் வாகனப் பதிவு எண் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் நிரந்தரமாக இணைக்கப்படும்.

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரபூர்வ ‘பரிவாஹன் சேவா’ இணையதளம் மூலம் உங்கள் வாகனத்தில் உள்ள நிலுவை அபராதங்களை சில நிமிடங்களில் தெரிந்துகொள்ளலாம். உங்கள் கணினி அல்லது மொபைலில் பிரௌசரை  திறந்து echallan.parivahan.gov.in என்று  உள்ளிடவும். ‘சலான் நிலையைச் சரிபார்க்கவும்’ என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.

   

அபராதச் சீட்டு எண், வாகனப் பதிவு எண் ( TN 00 XX 0000) மற்றும் சேஸ் எண் அல்லது எஞ்சின் எண் என ஏதாவது ஓன்று அல்லது ஓட்டுநர் உரிம எண் ஆகியவற்றை உள்ளிட்டு அபராதம் உள்ளதா எனத் தெரிந்துகொள்ளலாம்.