முன்னாள் மனைவிக்கு 4 லட்சம் ஜீவனாம்சம் கொடுக்கணும்… கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு நீதிமன்றம் உத்தரவு..!!

By Soundarya on ஆடி 2, 2025

Spread the love

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கும், ஹசின் ஜஹானுக்கும் கடந்த  2014 ஆம் வருடம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இதற்கிடையில் திருமணம் முடிந்து நான்கு வருடங்களுக்குள் இந்த ஜோடிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக 2018 முகமது ஷமி தன்னை துன்புறுத்துவதாக அவருடைய மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பின்னர் இருவரும் பரஸ்பர விவகாரத்தை பெற்றுக் கொண்டார்கள்.

இதனையடுத்து ஜீவனாம்சம் கோரி ஹசின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மாதம் 10 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கேட்ட நிலையில் 1.3 லட்சம் வழங்க  நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து ஹசின் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் இந்த மனுவை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் தற்போது நான்கு லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.