இப்போ வாங்கற சம்பளம் பத்தலையாம்… எம்எல்ஏ க்கள் சம்பளத்தை 3 மடங்காக உயர்த்தி மசோதா நிறைவேற்றம் – ஓய்வூதியமும் 3 மடங்கு உயர்வு!

By Elango on மார்கழி 11, 2025

Spread the love

ஒடிசா மாநிலத்தில் தங்களது சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று எம்எல்ஏக்கள் சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து மசோதா தாக்கல் செய்யப்பட்டு பின்னர் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஒடிசா மாநில எம்எல்ஏக்களுக்கு தற்போதைய சம்பளத்தை விட 3 மடங்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது 1.11 லட்சம் ரூபாய் சம்பளம் பெறும் எம்எல்ஏக்கள் இனி 3.45 லட்சம் உயர்த்தப்பட்ட நிலையில் சம்பளமாக பெறவார்கள்.

முதலமைச்சர் அமைச்சர் சபாநாயகர் துணை சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியமும் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது பதவியில் உள்ள எம்எல்ஏக்கள் யாராவது உயிர் இழந்தால் அவரது குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 17வது சட்டசபை பொறுப்பேற்றது. அன்று முதல் இந்த சம்பள உயர்வு அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.