தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுகவில் நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வரும் நிலையில் முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து அதிரடியாக விலகி வருகிறார்கள். சமீபத்தில் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் இபிஎஸ் மீது நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர்
இந்நிலையில் கடந்த ஒருவாரமாக செங்கோட்டையனுடன் கூடவே இருந்த பவானி MLA பண்ணாரி திடீர் திருப்பமாக எடப்பாடிக்கு ஆதரவு அளித்துள்ளார். செங்கோட்டையன், உள்ளிட்ட 9 பேர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.கே.செல்வராஜை பண்ணாரி சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இயக்கம் தான் பெரியது, தனிநபர் அல்ல; EPS-க்கு துணை நிற்போம் என அந்தர்பல்டி அடித்துள்ளார்.
