சிவாஜியை விட பல மடங்கு சம்பளம் அதிகமாக தருவதாக சொல்லியும் அவருடன் நடிக்க மறுத்த பிரபல நடிகர்.. இதுதான் காரணமா..?

By Nanthini on மார்ச் 3, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் அறிவிப்போடு நின்ற படங்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் ஆயிரம் படங்களுக்கு மேல் தேரும் என்றுதான் சொல்ல வேண்டும். நாடோடி மன்னன் திரைப்படத்தின் ஹிமாலய வெற்றிக்கு பிறகு எம்ஜிஆரின் இயக்கத்திலும் நடிப்பிலும் பல படங்கள் உருவாக போவதாக அறிவிப்புகள் வெளியானது. ஆனால் அதில் 85 சதவீதம் படங்கள் உருவாகவே இல்லை. அதுபோல அறிவிப்போடு நின்று போன மற்றொரு படம் தான் உலகநாயகன் கமல் இயக்கத்தில் உருவாக இருந்த மருதநாயகம். அந்தப் படத்தைப் போல மற்றொரு படத்தையும் அறிவிப்போடு நிறுத்தினார் கமல். அந்தத் திரைப்படம் தான் மர்மயோகி. தமிழில் அம்பிகாபதி படம் முதலில் உருவானபோது அதில் நடித்தவர் எம்.கே தியாகராஜ பாகவதர்.

Roar Tamil - தியாகராஜ பாகவதரின் அழியா நினைவுகள்

   

அது மீண்டும் உருவானபோது அதில் கதாநாயகனாக நடித்தவர் சிவாஜி. அந்த திரைப்படத்தில் சிவாஜியின் தந்தை கம்பராக எம்கே தியாகராஜ பாகவதர் நடித்த நன்றாக இருக்கும் என்று யோசனை செய்த படத்தில் இயக்குனர் ஏ எல் சீனிவாசனுக்கு வந்தது. அதற்காக தியாகராஜ பாகவதரை அணுகி சிவாஜிக்கு என்ன சம்பளமோ அதைவிட கூடுதலாக தருகிறோம். சிவாஜிக்கு தந்தையாக நடிங்க என்று இயக்குனர் கேட்டுக் கொண்டார். அதற்கு பாகவதர், சிவாஜிக்கு தந்தையாக நடிப்பதில் எனக்கு மகிழ்ச்சி தான்.

   

சிவாஜி படத்தில் நடிக்க அவரை விட அதிக சம்பளம் தருவதாக சொல்லியும் மறுத்த  நடிகர்... யாருன்னு தெரியுதா? | the famous actor refused to act sivaji  movie... what happened

 

ஆனால் நான் ஏற்கனவே அம்பிகாபதியாக நடித்தவன். அதனால் சிவாஜிக்கு தந்தையாக நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறி அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். அந்த சம்பவம் நடந்த சில மாதங்களில் எம் கே தியாகராஜ பாகவதரும் சிவாஜியும் இணைந்து பால்ய சக்கரம் என்ற படத்தில் நடிப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. பாகவதருக்கு ஜோடியாக வசுந்தரா தேவியும் சிவாஜிக்கு ஜோடியாக எம் என் ராஜமும் நடிப்பார் என்று அந்த விளம்பரம் வெளியானது. அந்த அறிவிப்பை பார்த்ததும் சிவாஜி ரசிகர்கள் பரவசமானார்கள். ஆனால் அது அறிவிப்போடு நின்று போனது.