உயிருக்கு போராடும் நிலையில் பிரபல நடிகை.. ஓடோடிச் சென்று KPY பாலா செய்த உதவி.. கலங்கிய நடிகை ஷகிலா..!

By Nanthini on பங்குனி 3, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் எண்பது காலகட்டத்தில் மனோரமாவுக்கு இணையாக காமெடியில் கலக்கியவர் தான் நடிகை பிந்துகோஷ். ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக பிரபு நடித்த கோழி கூவுது என்ற திரைப்படத்தில் ஆட்டம் பாட்டம் கூத்து என்று இவர் பட்டையை கிளப்பி இருப்பார். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து காணாமல் போன இவர் என்ன செய்கிறார் என்று யாருக்குமே தெரியாமல் இருந்தது. இப்படியான நிலையில் 75 வயதை கடந்துள்ள இவருக்கு பல நோய்கள் இருப்பதால் வீல்சேரில் அமர்ந்து தன் வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கிறார். தன் மகன்கள் யாரும் கவனிக்காமல் கைவிட்டு விட்டதால் மருத்துவ செலவு மற்றும் சாப்பாட்டு செலவு என எதற்கும் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக பல பேட்டிகளில் அவர் பேசியுள்ளார்.

உடல்நிலை சரியில்ல! சாப்பிட கூட வழியில்ல.. தவித்த பிரபல நடிகைக்கு உதவிய KPY பாலா

   

இப்படியான நிலையில் இவருக்கு உதவ வேண்டி நடிகை ஷகிலா ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் நான் சினிமா பிரபலமாக இருக்கும் நடிகர்கள் நடிகைகளிடம் ஒரே ஒரு வேண்டுகோள் வைத்துக்கொள்கிறேன். இதே சினிமா துறையில் நம்மை பலரையும் சிரிக்க வைத்த பிந்து கோஷ் தற்போது சாப்பிட கூட வழியில்லாமல் இருக்கிறார். அவர் உயிர் வாழ்வதற்கு உங்களால் முடிந்ததை கொடுத்து உதவுங்கள். நம்மை வாழவைத்த சினிமா துறையில் அவர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார். அவருடைய கஷ்டத்தை போக்குவதற்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.

   

உயிருக்கு போராடும் பிரபல நடிகை.. கேபிஒய் பாலா செய்த உதவி.. கண்ணீர் விட்டு கதறிய ஷகிலா | Actress Shakila Shares Video on Bindu Ghosh's Financial Struggles; KPY Bala Extends Help ...

 

ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் தன்னுடைய உடல் எடையை வைத்து தன்னைத்தானே அவமானப்படுத்தி பலரையும் சிரிக்க வைத்த இவர் இன்று கண்களில் கண்ணீருடன் இருக்கின்றார். அவர் கண்ணீரைத் துடைப்பதற்கு யாராவது உதவி செய்யுங்கள் என்று கையெடுத்து கும்பிட்டு சகிலா கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து மக்கள் பலருக்கும் தன்னால் முடிந்த சேவைகளை செய்து வரும் KPY பாலா பிந்து கோஷ் வீட்டுக்குச் சென்று அவரை நேரில் சந்தித்து அவரிடம் 80 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து உதவியுள்ளார். பாலாவை சகிலா தான் பிந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

உயிருக்கு போராடும் பிரபல நடிகை.. கேபிஒய் பாலா செய்த உதவி.. கண்ணீர் விட்டு கதறிய ஷகிலா | Actress Shakila Shares Video on Bindu Ghosh's Financial Struggles; KPY Bala Extends Help ...

பிந்துவுக்கு பாலா யார் என்று தெரியவில்லை. இருந்தாலும் பாலாவை பார்த்ததும் கையெடுத்து கும்பிட்டு நன்றி சொல்கிறார். அப்போது பாலா உங்களை நான் சின்ன வயதில் சினிமாவில் பார்த்திருக்கிறேன் அம்மா, இப்போது உங்களை இப்படி பார்ப்பதற்கு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னால இப்போதைக்கு இதுதான் முடியும் இதை வச்சுக்கோங்க என்னால் முடிந்த உதவிகளை நான் உங்களுக்கு செய்கிறேன். உங்களுக்கு நாங்க இருக்கிறோம் என்று தன்னம்பிக்கை கொடுத்துவிட்டு பாலா அங்கிருந்து புறப்பட்டார். பாலாவின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.