“மிரட்டல்களுக்கு அஞ்சுபவர்கள் அல்ல நாங்கள்”…. உங்க வேலையை வேற எங்கையாவது காட்டுங்க… ஆளுங்கட்சிக்கு ஸ்டாலின் விடுத்த நேரடி சவால்..!

Spread the love

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், திமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான எ.வ. வேலுவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டை மற்றும் திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. எந்த வழக்கு தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியாகாத நிலையில், இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சோதனை குறித்து திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ (ட்விட்டர்) தளத்தில் காட்டமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளரான அன்புச் சகோதரர் எ.வ. வேலுவின் இல்லத்தில் நடைபெறும் சோதனைக்கு அவர் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தச் சோதனையைச் சட்டப்படி எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் தங்களின் தரப்பு நியாயத்தை நிரூபிப்போம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும் தனது பதிவில், “திமுக ஆட்சி காலத்தில் ஊழல் நடந்ததாகக் கூறி, அரசியல் பழிவாங்கும் நோக்குடன் இதுவரை தொடரப்பட்ட ஒரு வழக்கில் கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்தது இல்லை என்பதே வரலாறு” என்று மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். ஆளுங்கட்சியினரின் இத்தகைய மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் திமுக அல்ல என்றும், இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையெல்லாம் பார்த்து வென்ற பாரம்பரியம் கொண்ட திமுக, இந்தச் சோதனையையும் எதிர்கொண்டு நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்பான பழைய வழக்கை தற்போதைய காவல்துறை கையில் எடுத்துள்ளதும் அரசியல் தளத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. கடந்த 2023-ல் நடந்த வருமான வரித்துறை சோதனையின் போது அதிகாரிகளைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட இந்த வழக்கில், மூன்று ஆண்டுகள் கழித்து தற்போது போலீஸார் தீவிரம் காட்டுவது ஏன் என்று நீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளது. அடுத்தடுத்து அரங்கேறும் இத்தகைய சோதனைகளும் சட்ட நடவடிக்கைகளும் தமிழக அரசியலில் அடுத்தகட்ட பரபரப்பை நோக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

நீங்கதானே என்னை ஃபெயில் ஆக்குனீங்க?… ஆசிரியரின் வயிற்றில் கத்தியை இறக்கிய மாணவன்… பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாற்றுச் சான்றிதழ் வாங்குவது தொடர்பான தகராறில் 17 வயது…

5 minutes ago

தவெக எம்.எல்.ஏ-வுக்கு வலை வீசிய யூடியூபர்: நடுராத்திரியில் நடந்த அதிரடி கைது.. பின்னணியில் இருக்கும் அந்த ‘பெரிய கை’…. அலறும் அரசியல் வட்டாரம்….!

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரை மாற்றுப் கட்சிக்கு இழுக்க பேரம் பேசி மிரட்டிய புகாரில், பிரபல யூடியூபரான ஐபிடிஎஸ்…

6 minutes ago

“என் மனைவி, மகளை நானே கொன்றேன்”…. தலை சிதறி இறந்து கிடந்த சிறுமி… தொழிலதிபர் வெளியிட்ட பகீர் வீடியோ… தர்மபுரியில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்….!

தர்மபுரியில் கடன் சுமை காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் தனது மனைவி மற்றும் மகளைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும்…

18 minutes ago

அம்மாவின் ஆனந்தக் கண்ணீர்… வரலாற்று வெற்றிக்கு பின் மொராக்கோ வீரர் செய்த ‘அந்த’ ஒரு காரியம்… உருகும் இணையம்…!

2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில், நெதர்லாந்து அணிக்கு எதிரான விறுவிறுப்பான பெனால்டி ஷூட்-அவுட் சுற்றில் மொராக்கோ அணி…

18 minutes ago

“புருஷன் கூட இருக்கும் போதே இப்படியா?”…. பேருந்தில் புதுமணப் பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்… மதுபோதையில் எல்லை மீறிய வாலிபர்…. அடுத்து நடந்த அந்த ஒரு சம்பவம்…!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதுமணப் பெண்ணிற்கு நேர்ந்த பாலியல் தொல்லை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பு சம்பவம்…

23 minutes ago

BREAKING: அடுத்த விக்கெட் அவுட்…. அதிமுகவில் இருந்து Ex அமைச்சர் விலகினார்… EPS-க்கு விழுந்த அந்த ஒரு ‘பலத்த’ அடி….!

அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அறிவித்துள்ள செய்தி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து கட்சிகளும்…

27 minutes ago