திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் காணொளி காட்சி மூலமாக இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பாதுகாக்கும் உரிய நோக்கத்துடன் பசி, உறக்கம், குடும்பம் ஆகியவற்றைத் துறந்து SIR பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். நாம் இவ்வளவு கஷ்டப்பட்டு இருந்தாலும் பாதி கிணறுதான் கடந்துள்ளோம். வெரிஃபிகேஷன் பணிகள் நிறைவடைந்து நம் மக்களின் பெயர்கள் விடுபடாமல் வாக்காளர் பட்டியல் வந்தால்தான் முழு கிணற்றையும் கடந்ததாக கருத முடியும்.
எத்தனை எதிரிகள் வந்தாலும் எத்தனை அணிகள் செயல்பட்டாலும் தமிழ்நாட்டை மீண்டும் ஆளப்போவது உதயசூரியன் தான். உங்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் நான் இதை கூறவில்லை. இதுதான் உண்மை. நம் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மூலமாக தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 86 லட்சம் மக்கள் நேரடியாக பயனடைந்து வருகிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் திராவிட மாடல் அரசின் சாதனைகள் அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கப்பட வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். நான் இரவிலும் தூங்காமல் உழைத்து வருகிறேன் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். அதே அளவிலான உழைப்பை ஒவ்வொருவரிடமிருந்தும் நான் எதிர்பார்க்கிறேன்.
2026 தேர்தல் வெற்றியை நோக்கி திமுகவினர் அனைவரும் பயணிக்க வேண்டும். ஒவ்வொரு பூத் கமிட்டி உறுப்பினரும் வீடு வீடாக செல்வதை உறுதி செய்யுங்கள். வீடு வீடாக சென்று விடுபட்ட வாக்காளர்களின் விவரங்களை முழுமையாக சரி பார்க்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் நமது வாக்குகளை உறுதி செய்திருக்க வேண்டும். இதனை மிகத்துல்லியமாக செய்து முடிப்பதை நம்முடைய முக்கியமான வியூகமாக இருக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ஜனநாயகன். இந்த படம் வரும் பொங்கலுக்கு…
அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் ஒதுக்கீடுகளில் சுமார் ரூ.1,020…
விஜய் தந்தையுடன் காங்கிரஸ் பிரமுகர் திடீரென சந்திப்பு நடத்தியது தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது. தமிழகத்தில் 2026 ஆம்…
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகளால் இண்டிகோ விமான சேவை ஏற்கனவே நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக பெரிதும்…
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் கூட்டணி வியூகம் மற்றும் தொகுதி பங்கீடு…
மலையேறும் பழக்கம் கொண்ட காதலனால் திட்டமிட்டு கிராஸ்க்லாக்னர் மலையில் கைவிடப்பட்டு பணியில் உறைந்து ஆஸ்திரேலிய பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை…