சவால் விட்டுட்டு இப்ப ஏன் சைலண்ட் மோட்ல இருக்கீங்க… ஏதாவது பண்ணுங்க CM சார்…. விஜய்யை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ஸ்டாலின்….!

By Nanthini on ஆனி 16, 2026

Spread the love

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருவது ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. பத்து வயதிற்கும் உட்பட்ட பச்சிளம் சிறுமிகள் கூட பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்படும் அவலநிலை தொடர்ந்து அரங்கேறி வருகிறது. காவல்துறையினர் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தாலும், இதுபோன்ற கொடூர எண்ணம் கொண்ட மனிதமிருகங்களின் மனதில் சட்டத்தின் மீதோ, தண்டனையின் மீதோ எந்தவொரு அச்சமும் ஏற்படவில்லை என்பதையே அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் காட்டுகின்றன.

   

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 12 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருப்பது அதிர்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது. குறிப்பாக, திருவள்ளூர் அருகே மூன்று வயது பச்சிளம் குழந்தையை வட மாநில வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்துள்ள சம்பவம், தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்பாக நடமாடக்கூடிய சூழல் இருக்கிறதா என்ற மிகப்பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. திறமையான அதிகாரிகளை நியமித்துவிட்டதாகவும், ‘சிங்கப்பெண் படை’ அமைத்துவிட்டதாகவும் மேடைகளில் முழங்கிய ஆட்சியாளர்களின் காதுகளுக்கு, தங்களின் நெஞ்சின் துண்டுகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களின் மரண ஓலம் இன்னும் கேட்கவில்லையா என்ற கொந்தளிப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

   

மக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு சார்ந்த அத்தியாவசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த அரசுக்கு எப்போது ‘கால்ஷீட்’ கிடைக்கும் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமரிசித்து வருகின்றன. குற்றவாளிகள் சற்றும் பயமின்றி தொடர் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க அரசு எடுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் என்ன என்ற கேள்விக்கு இதுவரை முறையான பதில் இல்லை. மக்களின் உயிரும், எதிர்காலத் தூண்களான குழந்தைகளின் பாதுகாப்பும் முற்றிலுமாகக் கேள்விக்குறியாகியுள்ள இந்த இக்கட்டான நிலையிலும், இன்னும் ஆறு மாத காலத்திற்கு யாரும் தங்களை கேள்வி கேட்கக் கூடாது என்று அரசு எதிர்பார்க்கிறதா அல்லது மக்கள் திரண்டு நடத்தும் ஒரு பெரும் போராட்டத்தை அது எதிர்கொள்ளக் காத்திருக்கிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.