மீரா தங்கம்…! ஒரு நிமிடம் யோசித்திருக்கலாம்…! சர்ச்சில் கதறி அழுத விஜய் ஆண்டனி மனைவி பாத்திமா…! 

By Begam on செப்டம்பர் 20, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமாக வலம் வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர்  தனது குடும்பத்துடன் சென்னை டி.டி.கே சாலையில் வசித்து வருகிறார். இவரது மகள் மீரா 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று அதிகாலை 3 மணிக்கு மீரா வீட்டில் உள்ள தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

   

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மீரா கடந்த ஒரு வருடமாக மனஅழுத்தத்திற்காக சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது.  மன அழுத்தம் காரணமாக அவர் இப்படியொரு விபரீத முடிவை எடுத்துள்ளார் என தெரியவந்தது. மேலும் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் தனது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார் மீரா.

   

 

இதில் Love You All, miss You All எனவும் குறிப்பிட்டு இருந்தார். இன்று காலை இறுதி சடங்குகள் முடிந்து பிறகு கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் உடல் அடக்கம் செய்துள்ளனர். அப்போது கடைசியாக தனது மகளிடம் ‘கருவறையில் உன்னை சுமந்ததில்  எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த ஜென்மத்தில் நாம் சேர்ந்து வாழா விட்டாலும் அடுத்த ஜென்மத்தில் சேர்ந்து வாழ்வோம். என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம். மீரா தங்கம்! ஒரு நிமிடம் நீ யோசித்திருக்கலாம்’ என விஜய் ஆண்டனியின் மனைவி கதறி அழுது பேசியுள்ளார். இதோ அந்த வீடியோ…