“சட்டசபைக்கு வர ஆசைப்பட்டார்.. ஆனா மக்கள்?”…. சீமான் பற்றி வெளிவந்த பகீர் உண்மை… அமைச்சர் வன்னி அரசு பரபரப்பு பேட்டி….!

By Nanthini on புரட்டாதி 12, 2026

Spread the love

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளிலுமே இடைநிலைச் சாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு காட்டமாக விவரித்துள்ளார். அம்பாசமுத்திரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திமுகவும் அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்; இரண்டு கட்சிகளுமே இடைநிலைச் சாதிகளின் பிடியில் சிக்கியுள்ளன” எனக் குற்றம் சாட்டினார். மேலும், கடந்த காலங்களில் சட்டப்பேரவையில் சட்டை கிழிக்கப்பட்ட சம்பவங்களை நினைவுகூர்ந்த அவர், தற்போது பேரவையின் செயல்பாடு அமைதியாக இருப்பதையும், சமூக நீதித்துறை மாற்றத்திற்கான பின்னணி குறித்து ஏற்கனவே பேரவையில் விளக்கம் அளிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார். அத்துடன், புதிய தலைமைச் செயலக சர்ச்சை குறித்து முதலமைச்சரே உரிய முடிவை எடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மை இலக்கு என்றும், விசிக இருக்கும் அணியே உண்மையான இடதுசாரி மற்றும் பாஜக எதிர்ப்பு அணியாகத் திகழும் என்றும் வன்னி அரசு உறுதியாகத் தெரிவித்தார். தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானைக் கடுமையாக விமர்சித்த அவர், “சினிமாவிலிருந்து வந்து சட்டமன்றத்திற்குள் நுழைய ஆசைப்பட்ட சீமானை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை; அவர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எந்தப் பங்களிப்பும் செய்யாமல், மக்களிடையே வெறுப்பு அரசியலை விதைத்து தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார்” என்று சாடினார்.