“ஜெயலலிதா ஆன்மாவையே கொன்றுவிட்டார் பழனிசாமி” ‘அடிமை’ விவாதத்தில் அமைச்சர் சிவசங்கர் கொடுத்த மரண அடி..!!

By Soundarya on பங்குனி 26, 2026

Spread the love

தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக இடையே ‘யார் அடிமை?’ என்ற விவாதம் தற்பொழுது அரசியல் களத்தில் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை “அடிமை கட்சிகள்” என்று விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திமுக அமைச்சர் சிவசங்கர் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள், ‘மோடியா? இந்த லேடியா?’ என்று பாரதிய ஜனதா கட்சிக்கே சவால் விட்ட ஒரு துணிச்சலான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி அந்த நிலைப்பாட்டை முற்றிலும் மாற்றிவிட்டார். ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கும் அவரது ஆன்மாவிற்கும் துரோகம் விளைவிக்கும் வகையில், பாஜக-விற்கு அடிபணிந்து பழனிசாமி செயல்பட்டு வருகிறார்” என்று சாடினார்.

   

மேலும், அதிமுகவின் ஒவ்வொரு நடவடிக்கையும் பாஜகவின் விருப்பத்திற்கு இணங்கவே அமைந்துள்ளதாகவும், ஜெயலலிதாவின் ஆன்மாவையே சாகடிக்கும் அளவிற்கு பழனிசாமியின் செயல்பாடுகள் இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். தேர்தலை நோக்கிய இந்த வார்த்தைப் போர், இரு கட்சிகளுக்கும் இடையே நிலவும் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.