கோவில் உண்டியலில் போடப்படும் பணத்தில் இருந்து கல்லூரிகள் கட்டுவதற்கு எதற்காக செலவு செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது சர்ச்சையை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து அறநிலையத்துறை நிதியிலிருந்து கல்லூரி ஆரம்பித்தால் மாணவர்களின் தேவைக்கான நிதி கிடைக்காது என்பதால் அந்த கருத்தை கூறியதாக பிறகு விளக்கம் அளித்தார். இப்படி என்ன நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பெயரை பல்டி பழனிச்சாமி என மாற்றிக் கொள்ளலாம் என்று அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய சேகர் பாபு, கோவில் பணத்தில் கல்லூரி கட்டுவது சதி செயல் என்று பேசிவிட்டு தற்போது மாற்றி பேசுவதா? எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது பெயரை பல்டி பழனிசாமி என மாற்றிக் கொள்ளலாம். அவர் திமுகவை மட்டுமல்ல அவரது கட்சி தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவையும் விமர்சிக்கிறார். கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொரியும் வேளையில் எடப்பாடி பழனிச்சாமி இறங்கியுள்ளார் என சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் அபார வெற்றி…
ஆளுநரின் வாகனக் கடந்து செல்லும் நிகழ்விற்காகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பிரசவ வலியால் அவதிப்பட்ட தன் கர்ப்பிணி மனைவியுடன் கணவர் ஒருவர்…
பாஜக தலைவர்களில் ஒருவரான அண்ணாமலை, கட்சியில் இருந்து தனக்கு ஏற்பட்டுள்ள சில அரசியல் அதிருப்திகள் காரணமாக, பாஜகவிலிருந்து விலகி புதிய…
ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூரில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA) அலுவலகத்தில் பணியாற்றிய சஞ்சய் அடேகா என்ற இளநிலை…
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஓல்ட் ஏர்போர்ட் சாலையில், அம்மாநில ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் கடந்து செல்வதற்காக சுமார் 30…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வீதியில் 'குமர விலாஸ்' என்ற ஹோட்டலை நடத்தி வரும் ராஜசுந்தரம் - ஜெயந்தி தம்பதியினரிடம்,…