அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க..? தவெக அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு.. பின்னணி என்ன..?

By Swetha on ஆனி 3, 2026

Spread the love

காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்ட விழாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தமிழகத்தில் தவெக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் தொடர்ந்து விவாதப் பொருளாகி வருகின்றன. அந்த வகையில், இந்த தேரோட்ட ஆய்வின்போது கூட்ட நெரிசலையும், அசம்பாவிதங்களையும் தவிர்க்க அமைச்சர் ரமேஷ் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

ஆய்வின்போது பேசிய அமைச்சர், தேர் செல்லும் குறுகலான பாதைகளில் அன்னதானம் மற்றும் தண்ணீர் பந்தல்கள் அமைக்கும்போது மக்கள் கூட்டம் கூடி தேர் நகர்வதில் சிக்கல் ஏற்பட்டுவிடக் கூடாது என்று எச்சரித்தார். உணவு மற்றும் தண்ணீர் கவுன்டர்களில் மக்கள் சாலையை ஒட்டி நிற்காமல், மறுபுறம் நிற்குமாறு ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு ஸ்டாலுக்கும் ஒரு போலீசாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும், தேர் செல்லும் வழிகளில் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்கக் கூடாது என்றும், அவ்வாறு நிறுத்தப்பட்ட வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு ஆணையிட்டார்.

   

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துப் பேசிய அவர், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யக் கோரினார். மின் கம்பங்கள் மற்றும் அலங்கார விளக்குகளுக்கான ஒயர்களால் எந்தவித மின்விபத்தும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்குமாறும், மின்கம்பங்கள் அருகே பயிற்சி பெற்ற நபர்களை நிறுத்தி தொடர்ந்து கண்காணிக்குமாறும் அறிவுறுத்தினார். இறுதியாக, தேரோட்டப் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் உடல்நிலையை மருத்துவக் குழு மூலம் பரிசோதித்து, உடல்நலக் குறைவு உள்ளவர்களுக்குப் பதிலாக மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் ரமேஷ் திட்டவட்டமாகக் கூறினார்.