ரகசியத்தை உடைத்த கருப்பு ஆடு…! “106 அறிவிப்புகள் எப்படி முன்கூட்டியே தெரிந்தது…? சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் முன் பாய்ந்த அமைச்சர் ரமேஷ்…!!

By Devi Ramu on ஆவணி 22, 2026

Spread the love

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் தவெக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய சேகர்பாபு, “நீங்கள் இப்போது 106 அறிவிப்புகளை வெளியிடப் போகிறீர்கள்” என்று கூறிப் பரபரப்பை ஏற்படுத்தினார். மானியக் கோரிக்கை விவாதத்தின் போது அமைச்சர்கள் வெளியிடப்போகும் புதிய அறிவிப்புகளின் எண்ணிக்கை மற்றும் விவரங்கள் சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை ரகசியமாக வைக்கப்படும் சூழலில், சேகர்பாபு சரியாக 106 அறிவிப்புகள் எனச் சொன்னது அவையில் பெரிய விவாதத்தைக் கிளப்பியது.

இதன்பின் பேசிய அமைச்சர் ரமேஷ், 106 அறிவிப்புகள் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட சேகர்பாபுவுக்கு, அவர் கேட்ட கல்லூரி தொடர்பான அறிவிப்பும் அதில் உள்ளது என்பதை அதிகாரிகள் சொல்லாமல் விட்டுவிட்டார்கள் எனச் சாடினார். தவெக ஆட்சியில் சில அரசு அதிகாரிகள் இன்னும் முந்தைய திமுக அரசுக்கு விசுவாசமாகத் தகவல்களை அனுப்பி வருவதாக எழுந்துள்ள புகார், இந்தச் சம்பவத்தின் மூலம் மேலும் வலுப்பெற்றுள்ளது.