சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறவுள்ள அவசரச் செயற்குழு கூட்டத்தில், கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. குறிப்பாக, தேர்தலுக்கு முன்பாக மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைந்த ஓ. பன்னீர்செல்வம் (OPS) உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுக்குக் வழங்கப்படவுள்ள புதிய கட்சிப் பொறுப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும், நிர்வாக வசதிக்காக மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 78-லிருந்து 100-க்கும் அதிகமாக உயர்த்தும் முடிவுகளும் இக்கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
