நடிகர் அஜித்குமார் ஆற்றல்மிக்க அற்புதமான மனிதர் என்றும், தமிழக முதல்வர் மீது நம்பிக்கை வைத்து வாழ்த்து தெரிவித்த அவருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அண்ணன் அஜித் ஆசைப்பட்டபடியே விளையாட்டுத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முதல்வர் பல்வேறு அரிய முன்னேற்றங்களை நிச்சயம் ஏற்படுத்துவார் என்று உறுதியளித்த அமைச்சர், தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இரவு 9.30 மணி எப்போது ஆகும் என்று ஆர்வத்துடன் காத்திருக்கும் சூழலை தங்கள் ஆட்சி ஏற்படுத்தி உள்ளதாகக் கூறினார். முந்தைய காலத்தில் வீடுகளில் சினிமா வசனங்களும் பஞ்ச் டயலாக்குகளும் ஒலித்த நிலையில், இன்று ‘நேரலை நாயகன்’ முதல்வரின் வாயிலாகச் சட்டசபை நிகழ்வுகள் நேரடியாகவே மக்களைச் சென்றடைந்து ஜனநாயகப்பூர்வமாக நடைபெற்று வருவதாகவும், இதன் மூலம் ஒரு புதிய தலைமுறையையே தங்கள் தலைவர் மாற்றிக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டாராம்.
அதேவேளையில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டில் நடைபெற்ற சோதனைகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், சம்பந்தப்பட்டவர் மூத்த அரசியல்வாதி என்பதால் இதனை அவர் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வார் என்று தெரிவித்தார். மேலும், “நாங்கள் 1 ரூபாய் கூட தொடமாட்டோம், தொடவும் விடமாட்டோம், தொட்டவர்களையும் விடமாட்டோம்” என்று முதல்வரின் பாணியிலேயே அதிரடியாகப் பதிலளித்த அவர், ஊழலுக்கு எதிரான தங்கள் அரசின் தீர்க்கமான நிலைப்ப்பாட்டை அழுத்தமாகப் பதிவு செய்தார். தங்களது வெளிப்படையான நிர்வாகமும், சட்டசபை நிகழ்வுகளின் நேரலையும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், இதனை அனைவரும் மனமார வரவேற்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல கேதர்தால் மலையேற்றப் பாதையில் பயணம் மேற்கொண்ட ஏழு மலையேறுபவர்கள் மற்றும் ஒரு…
துருக்கியின் நெவ்செஹிர் பகுதியில் உள்ள ஒரு பணியிடத்தின் முன்பாக நின்று கொண்டிருந்த பெண்ணை, நபர் ஒருவர் திடீரென முகத்தில் அறைந்து…
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சரைகேலா-கர்சாவான் மாவட்டத்தில், குடும்பத் தகராறு குறித்து புகார் அளிக்க காவல் நிலையம் சென்ற பெண் ஒருவரை, காவலர்…
அவளது வீட்டின் வாயிலில் வண்டி நின்றபோதும் அவனது குரலில் விடாப்பிடியான பிடிவாதம் குறையவில்லை. பணி முடிந்து களைத்திருந்த அந்த இரவில்,…
சூரத்தின் அத்வா மற்றும் அத்வாலைன்ஸ் எல்லைப் பகுதிக்குட்பட்ட நான்புரா மட்டன் மார்க்கெட் அருகே, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் முகமது…
புளோரிடாவில் நடந்த கோரமான லியர்ஜெட் விமான விபத்தில், அதில் பயணித்த ஒன்பது பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து நடப்பதற்கு…