தமிழ் திரையுலகில் ‘மாயி’, ‘வசீகரா’, ‘கன்னி ராசி’ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் பாவா லட்சுமணன், தற்போது கடுமையான துயரமான சூழ்நிலையில் உள்ளார். சர்க்கரை நோயின் பாதிப்பால் அண்மையில் அவர் தனது காலில் உள்ள 3 விரல்களை இழந்துள்ளார். மேலும், தங்குவதற்கு சொந்தமாக வீடும் இன்றி அவர் பெரும் தவிப்புக்குள்ளாகி இருந்தார்.
இவரது இந்த இக்கட்டான நிலையை அறிந்த அமைச்சர் ராஜ்மோகன், அவருக்கு உடனடியாக நிதியுதவியோ அல்லது தங்குமிட உதவியோ செய்யும் பொருட்டு தனது உதவிக்கரத்தை நீட்டியுள்ளார். தங்குவதற்கு இடமின்றி தவிக்கும் பாவா லட்சுமணனுக்கு, சென்னை எம்.எல்.ஏ ஹாஸ்டலில் உள்ள தனது சொந்த அறையிலேயே 6 மாத காலத்திற்கு தங்குவதற்கு அமைச்சர் ராஜ்மோகன் அனுமதி அளித்து மனிதாபிமானத்துடன் உதவியுள்ளார்.
