“அமைச்சரவையில் இருந்து தூக்குவீங்களா? நாங்களே போறோம்”…. தவெக ஆட்சியை மிரட்டும் காங்கிரஸ் அமைச்சர்… அரசியலில் உச்சகட்ட பரபரப்பு….!

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே நடைபெற்ற காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் கலந்துகொண்டு பேசினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கட்சியின் முக்கியச் சட்டசபை மற்றும் லோக்சபா உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்றனர். விழாவில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், வரும் 2029 லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தவெக கூட்டணி ஏற்காவிட்டால், காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்தும் கூட்டணியில் இருந்தும் உடனடியாக விலகும் எனத் தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் தான் அடுத்த பிரதமர் என்று தவெக அமைச்சர்களும், சமூக வலைத்தள இன்புளூயன்சர்களும் தொடர்ந்து பேசி வரும் சூழலில், அமைச்சர் ராஜேஷ்குமாரின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு எப்போதும் தாம் தெளிவாகப் பதிலளித்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், எந்தவொரு தனிநபரை விடவும் காங்கிரஸ் கட்சியும் அதன் கொள்கைகளுமே தங்களுக்கு முதன்மையானது என்றும், கட்சியின் தலைமையின் முடிவுக்குத் தொண்டர்கள் அனைவரும் முழுமையாகக் கட்டுப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக, காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்தது. இந்த கூட்டாட்சி அமைப்பில் காங்கிரஸ் தரப்பிற்கு இரு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. எனினும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கடைநிலைத் தொண்டனின் முகமாகத் திகழும் ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும், இதற்கு தவெக உடன்படாத பட்சத்தில் காங்கிரஸ் அமைச்சர்கள் இருவரும் அடுத்த நிமிடமே தங்களது பதவிகளை ராஜினாமா செய்வார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.

அமைச்சர் பதவி என்பது தங்களுக்குப் பெரிதல்ல என்றும், இந்த இயக்கமும் கட்சியுமே தங்களை உயர்த்திய தூண்கள் என்றும் பேசிய ராஜேஷ்குமார், ராகுல் காந்தியைப் பிரதமராக்குவதே கட்சியின் ஒரே இலக்கு என்பதைத் தெளிவுபடுத்தினார். தவெக அமைச்சரவையில் நீடிப்பதை விடக் கட்சியின் கொள்கையும் அகில இந்தியத் தலைவரின் தலைமையுமே முக்கியம் என அவர் அறிவித்திருப்பது, தவெக – காங்கிரஸ் கூட்டணியின் எதிர்கால உறவில் புதிய சலசலப்பை உருவாக்கியுள்ளது.

Nanthini

Recent Posts

விபத்துனு நினைச்சா பெருங் கொள்ளை… சினிமா பாணியில் அரங்கேறிய ரூ.14 லட்சம் ஸ்கெட்ச்… நடுரோட்டில் மோதிய ஸ்கூட்டர்… வெளியானது அதிர்ச்சி CCTV…!!

டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…

1 மணத்தியாலம் ago

“என் பொண்ணு கூட பழகுவியா?”… நள்ளிரவில் வீடு புகுந்து வெறிச்செயல்… மகளின் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய தந்தை… வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!!

மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…

1 மணத்தியாலம் ago

“பைக்கும் செயினும் தரலையா?”… பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கணவர்… வரதட்சணை கேட்டு கொடுமை… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!

சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…

1 மணத்தியாலம் ago

“அம்மா நான் எந்த தப்பும் பண்ணல!”… கதறிய மகள்… கருவி சொன்ன பொய்… ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து கதறி அழுத தாய்… மருத்துவமனையில் உடைந்த மர்மம்…!!

வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…

2 மணத்தியாலங்கள் ago

அதிசயமா? தெய்வத்தின் அவதாரமா?… ஆற்றில் கிடைத்த விசித்திர தாடைக்கல்… சாமி என திரண்டு வணங்கும் மக்கள்… நடந்தது என்ன?…!!

மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…

2 மணத்தியாலங்கள் ago

வீடு திரும்பாத தந்தை… துப்பாக்கியை காட்டி மிரட்டிய கும்பல்… சகோதரிகளுக்கு நேர்ந்த கொடூரம்… அதிரடி வேட்டையில் சிக்கிய காமுகர்கள்…!!

பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…

2 மணத்தியாலங்கள் ago