நான் இப்போ திமுக காரன்… பழச எல்லாம் இப்போ ஏன் தோண்டுறீங்க..? செய்தியாளர்கள் கேள்வியால் கடுப்பான அமைச்சர் முத்துசாமி..!!

By Soundarya on புரட்டாதி 18, 2025

Spread the love

ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமியிடம் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி டெல்லிக்கு சென்றது குறித்து என்ன கருதுகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு தெரியாது என்று சிரித்தபடி கூறி இருக்கிறார். அமைச்சர் முத்துசாமி எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது அதிமுகவில் அமைச்சராக இருந்தவர் என்பதால்  அவரிடம், டெல்லிக்கு தமிழக நலனுக்காக பழனிசாமி சென்றாரா? அல்லது கட்சியை காப்பாற்ற சென்றாரா..? சந்தித்து விட்டு திரும்பும் போது முகத்தை மூடி சென்றாரே ஏன்..? நீண்ட காலமாக நீங்கள் அதிமுகவின் முக்கிய தலைவராக இருந்ததால் உங்களுடைய கருத்து என்ன என்று கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

அதற்கு பதில் அளித்த முத்துசாமி இப்போது அந்த கட்சியில் இருக்கும் யாரையாவது பார்த்து கேளுங்கள். நான் இப்போது திமுககாரன் பழசை எல்லாம் வந்து ஏன் இப்பொழுது தோண்டுறீங்க..? அதை எல்லாம் விடுங்க” என்று கூறியுள்ளார்.