திமுகவுக்கு நெருக்கடி…! அமித்ஷாவிடம் சீக்ரெட்டை சொன்ன EPS… 2024-இல் நடந்ததை செய்யப்போகும் அதிமுக-பாஜக கூட்டணி…!!

By Soundarya on புரட்டாதி 18, 2025

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியிடம் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் செய்த தவறை செய்யாமல் வரும் 2026 இல் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்று அமித்ஷா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. டெல்லி சென்ற எடப்பாடி நேற்று முன்தினம் இரவு அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் பொதுவான அரசியல் நிலவரங்கள், விஜயின் கட்சியின் தாக்கம், கூட்டணி வலுப்படுத்துவது குறித்து அமித்ஷா பேசியுள்ளார். 2024 லோக்சபா தேர்தலின் போது ஊழல் வழக்குகளை சிக்கிய ஆம் ஆத்மி கட்சியினருக்கு நாம் நெருக்கடி கொடுத்தது போல திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று அமித்ஷாவிடம் பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்தையும் பொறுமையாக கேட்ட அமித்ஷா சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் இல்லாவிட்டால் அதை அதிமுகவின் எதிர்காலம் பாதிக்கப்படும். அதிமுகவில் யாரை சேர்ப்பது நீக்குவது உங்கள் கட்சி விவகாரம். ஆனால் கட்சி பலமாக இருந்தால் தான் வெற்றி கிடைக்கும் என்று மறந்து விடக்கூடாது என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது.