திமுக அமைச்சர் ஐ. பெரியசாமி கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவைக்கு கட்சி பணிக்காக சென்ற போது அவருக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பரிசோதனை நடைபெற்ற வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் வயிற்று வலி காரணமாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் பெரியசாமி அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
