ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அருகே உள்ள தாமரைப்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் தீபலக்ஷ்மி தம்பதியினருக்கு ஏழு வயதில் மிதுன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் காவனூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார் இந்நிலையில் நேற்று வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற சிறுவன் மதிய உணவு இடைவெளியில் வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவை சாப்பிட்டு உள்ளார். இதனைத் தொடர்ந்து வகுப்பறைக்கு சென்ற மாணவன் திடீரென்று முகம் வீங்கி வகுப்பறையில் மயங்கி விழுந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வகுப்பு ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகம் உடனே மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துவிட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு மாணவர் அடைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மாணவர் மிதுன் 11.30 மணி அளவில் ஸ்னாக்ஸ் நேரத்தில் வீட்டிலிருந்து கொண்டு வந்த கேக் மற்றும் மதிய உணவு நேரத்தில் இட்லி சாப்பிட்டது தெரியவந்தது.
மாணவன் சாப்பிட்ட அந்த கேக் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக தாமரைப்பாக்கத்தில் உள்ள தனியார் பேக்கரியில் வாங்கியதும் அதனை பிரிட்ஜில் வைத்திருந்த நேற்று ஸ்னாக்ஸ்காக மிதுன் மற்றும் அவருடைய அக்காவுக்கு பெற்றோர் கொடுத்ததும் தெரிய வந்தது. மேலும் கேட்கை சாப்பிடும்போது துர்நாற்றம் வீசியதால் கீழே வீசிவிட்டதாக சிறுவடி நக்கா போலீசில் தெரிவித்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியின் உதவியோடு ஆய்வு செய்ததில் அந்த கேக் காலாவதியானது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் கேக் சாப்பிட்டதால் ஃபுட்பாய்சன் ஆகி மாணவன் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிக்கு சென்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
