சாதி பார்த்து முதலமைச்சர் விஜய் தமக்கு அமைச்சர் வாய்ப்பளிக்கவில்லை என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். திருச்சியில் இன்று (மே 23) செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாங்கள் பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளை முன்வைத்து வழிநடப்பவர்கள் என்றும், அதனால் சாதியை வைத்து பேச வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், முதலமைச்சர் விஜய் தங்களுடைய சாதனைகளை அறிந்துதான் இந்த வாய்ப்பை வழங்கினாரே தவிர, சாதி பின்னணியை பார்த்து அல்ல என்றும் அவர் திட்டவட்டமாக விளக்கமளித்தார்.
முன்னதாக, பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதாக சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரவலான விமர்சனங்கள் எழுந்தன. இந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே அமைச்சர் ரமேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து இந்த விளக்கத்தை அளித்துள்ளார். இதன் மூலம் சாதி அரசியலுக்குத் தங்களது ஆட்சியில் இடமில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
